Selvam sera pariharam - panam vara pariharam - kerala manthrigam

செல்வம் சேர வாழ்வியல் பரிகாரங்கள் 




1.காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்


2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.


3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.


4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டு பாட்டுக்கு உரிய சொல்.


நல்ல வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? Continue reading 


5. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.


6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும். இதை எடுத்துவிட்டு ராஜா கை வைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.


7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.


8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.


9. படத்திற்க்கும் கள்ளா பெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.


10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.


வராத கடனை வசூல் செய்ய முடியலையா ? Continue reading 



11. திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.


12. லட்சுமி,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம " என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.


13. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.


14. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.


15.பெண்கள் மங்களகரமாக இருக்க வேண்டும். பூ வைத்து பொட்டு வைத்து இருப்பது பெண்களுக்கு அழகு. பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்காமல் பூஜை செய்யக்கூடாது.


16.பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.


17.தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது. 


18.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.


MAHA GURU BALAJI

CELL : +91 8838511337




கருத்துரையிடுக

0 கருத்துகள்